சென்னை,பிப்.17- ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து 63,520க்கு விற்பனையாகிறது.
கடந்த சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தங்கம் விலை கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 7,940க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும் விற்பனையாகிறது.